Sunday, January 11, 2009

நெருடா


``நீங்கள் நெருடாவை மொழி பெயர்க்க வேண்டும்.'' இரு வருடங்களுக்கு முன் 
கவிதை சொன்னது இது. இப்பொழுதுதான் வாய்த்திருக்கிறது எனக்கு. அம் 
மாபெரும் கவிஞன் எழுதிய கவிதைத் தொகுப்பின் முதல் காதல் கவிதை இது. 

அவன் என்னை மன்னிப்பான் என்ற நம்பிக்கையுடன்.

****
பெண்ணின் உடல்  

பெண்ணின் உடல், வெள்ளை மலைகள், வெள்ளைத் தொடைகள்  
பூலோகத்தைப் போலிருக்கும் நீ, என்னில் சரண் அடைந்தாய். 
என் கடிய உழவனின் உடல் உன்னுள் ஆழப் பாய்ந்து  
பூமியின் அடியாழத்தில் உருவாக்கி எழச் செய்யும் மகனை.

நீண்ட கணவாய் போல் தனித்திருந்தேன். பறவைகள் பறந்தன 
நீள் இரவு எனைச் சூழ்ந்து பரவி ஆழ அழுத்தியது. 
எனைக் காக்க உனை நான் ஆயுதமாய் அணிந்தேன் 
என் வில்லின் அம்பு போல, கவட்டையின் கல் போல.
 
ஆனால் பழி வாங்கும் நாழிகை நெருங்கி விட்டது. ஆம், நான் உன்னில் காதலுற்றேன் 
உணர்கிறேன் உன் உடலின் சதையை, பாசியை , அதன் ஆர்வம் மற்றும் தடித்த பாலை.
ஆஹா, மதுக் கிண்ணம் போன்ற முலைகள்; ஹா, வெறுமையின் விழிகள்,
ஆஹா, பெண்மையின் இளஞ் செவ்விதழ்கள்; ஹா, உன் மெலிய, சோகக் குரல்.

இது என் பெண்ணின் உடல், நான் உன் நளினத்தில் வாழ்வேன் 
என் தாகம், என் அளவற்ற ஆசை, என் மாறும் பாதை! 
இருண்ட நதிக் கரையோரங்களில் தீராத் தாகம் பாயும், 
சோர்வு எனைத் தொடரும், டன் அளவில்லா வலி.



3 comments:

Vani said...
This comment has been removed by the author.
Vani said...

Arvind,a heartwarming effort and I am glad you began with the love poems. Waiting to see how you will deal with 'I do not love you....':

Meanwhile, a couple of suggestions that you may want to think of:

Can you think of a better word than 'Boologam' (Sorry,havent yet installed the Tamil font in my PC) when you translate, 'You look like a world, lying in surrender?'
Especially, when you consider the use of the word 'Bhoomi' in the next sentence, (Neruda uses 'world' and 'earth' in explicit differential-ness), it looks like you are restrictively referring to the woman's earthy fertility rather than her expansiveness.
Also, why try to be coy when translating, "Oh, the roses of the pubis?"

You've got the gift, man!! Go tell it to world. Love and cheers!

The Ugly One said...

i'm just trying my hand at translation (from english!). hope to work on 'em tirelessly to be faithful to the original. thanks for suggestions & the belief in me. .love.

Stories From The Soul Town

There lies a magical land. Surrounded by the green ghats to the west, gurgling great rivers on the east, the valley with the very blue sky. A temple town of the tamils. Sitting on the dancing rock on the highland overlooking the valley, the writer procreates the lives of the people of this lesser known south west. Full of strange yet simple souls.