Showing posts with label poetry. Show all posts
Showing posts with label poetry. Show all posts

Tuesday, July 27, 2010

அடங்கா மனம்...

வறுமையில் உழலும், இருக்கும் இடம் தெரியாத இன்னொரு இலக்கியவாதி தோழர் தேனி செ. சு. வாசி எழுதிய கவிதைகளில் சில.

"அடங்கா மனம்" தொகுப்பிலிருந்து...


***

உண்மை தெரியுமா?
------------------

தினம் தினம் காலை
யோகா பயிற்சி
மனம் விரும்புதே
அமைதி புரட்சி
அயல் அடிமை வாழ்வில்
மலர்ந்த மகிழ்ச்சி
ஆடிப் பாடினோம்
ஆனந்த மகிழ்ச்சி
கொடிய கையூட்டு
கொடி போல் படர்ந்து
கோடானு கோடி மக்களை
கொடுமை படுத்துதே
சட்டமியற்றி சாதனை
படைத்த மனிதா
பிரிந்த சாதி மத
சாக்கடையில் தவழ்வது
சரியா...
கல்வி பல பயின்றாலும்
ஒழுக்க அற நெறியில்
மிருக சாண மனம் வீசுதே
பொய் மனிதா பொய் மனிதா
உண்மை உனக்கு தெரியுமா
பேசிப் பார்...
பிரபஞ்சம் தலைவணங்கும்

***

கானல் நிலம்
------------

காணி நிலத்தில்
களைஎடுத்து
சேற்றில் உழுதுளப்பி
வீரியம் நிறைந்த
விதை விதைத்து
பயிராக பாடுபட்டு
வெயிலில் வெந்து
வந்துள்ளோம்....
எனக்கும் அவனுக்கும்
இடைத்தரகன் - நீ
எள்ளளளவு போதுமென்று
நெல்அளவை தேடுகின்றாய்
மடை கட்டி
மருகா வெட்டி
பகல் இரவெல்லாம்
நீர் பாய்ச்சி
நெஞ்சுரம்
நிறைந்ததைய்யா
....
இது தானா விலை?

***

வளர்ச்சி
--------

நட்புறவும்
விடுமுறை நாட்களும்
அறியப்பட்ட
நாம்... காதல்
சொந்த பந்தங்கள்
பகை மறந்து
ஒன்று சேர்ந்து
வாழ்ந்து இருப்பது
எப்போது?

***

யதார்த்தம்
---------

உழைப்பே மூலதனமென
புரிந்தவர்கள்
மாய்மாலம் பேசி
இலவசமாகப் பெற்ற
உழைப்பில் உயர்ந்த
முதலாளியை பார்த்து
ஏக்கத்தோடு....
அவர் உயர்வுக்கு
நான் தான் காரணம்
என்கிறார்கள்
தொழிலாளர்கள்

***

தேச துரோகிகள்
--------------

வேட்பாளர்கள் வீதி வீதியாக
கையோசை எழுப்பும்
கூட்டங்களுடன் - வாக்கு
சேகரிக்கும் அன்றே
வெற்றியின் யுக்திகளை
வழிவகை செய்கிறார்கள்
விலை நிர்ணயிக்க முடியாத
சொத்துக்களை, குடும்ப
அட்டை அடகும் வைக்கும்
வழக்கத்தில் உள்ளவர்கள்
மக்களின் பிரதிநிதிகளாக
வெற்றியடைய முயற்சிப்போரிடம்
மறைமுக கையூட்டு
கரன்சிகளை பெற்று
தங்கள் வாழ்விட சொத்துக்களை;
அதிகபட்சம் ஐந்தாண்டுகளுக்கு
கேள்வியுரிமைகளையும்
வசதிவாய்ப்புகளையும்
அன்றாட தின கூலி தொகைக்காக
அன்பளிப்பும் பெற்று
வாக்களித்த மக்கள்;
அதுசரியில்லை இதுசரியில்லைஎன
குறை கூறுகிறார்கள்.
தேசிய சட்டத்தின்
முதல் குற்றவாளிகள்
மக்களே....

Thursday, September 03, 2009

இன்றிரவு நான் எழுதுவேன்


இன்றிரவு நான் எழுதுவேன் துயரமிகு வரிகளை

எழுதுவேன், உதாரணத்திற்கு, `இந்த இரவு நட்சத்திரங்களால் ஜொலிக்கிறது
அந் நட்சத்திரங்கள் நீல நிறத்தில் நடுங்குகின்ற்ன தொலை தூரத்தில்.’

இரவின் காற்று வானத்தில் சுழன்று இசைக்கிறது.

இன்றிரவு நான் எழுதுவேன் துயரமிகு வரிகளை
நான் அவளைக் காதலித்தேன், சில நேரங்களில் அவளும் என்னைக் காதலித்தாள்

இதைப் போன்ற இரவு நேரத்தில் ஒரு நாள் என் கைகளில் ஏந்தியிருந்தேன்
அவளை முத்தமிட்டேன் மீண்டும் மீண்டும் எல்லையற்ற வானத்தின் கீழ். 

அவள் என்னைக் காதலித்தாள், சில நேரங்களில் நானும் அவளைக் காதலித்தேன்
எவ்வாறு ஒருவன் காதல் வயப்படாமல் இருக்க முடியும் அவளின் பெரிய, சலனமற்ற விழிகளால். 

இன்றிரவு நான் எழுதுவேன் துயரமிகு வரிகளை
அவள் என்னுடன் இல்லை என்றெண்ணும் பொழுது, அவளை இழந்துவிட்டேன் என்றுணரும் பொழுது.

அவள் இல்லாமல் விரிந்திருக்கும் இவ்விரவைக் கேட்கும் பொழுது
கவிதை விழுகிறது ஆன்மாவில் பச்சையை நோக்கிப் பாயும் பனித் துளிபோல்

எது முக்கியம் ஏன் என் காதல் அவளைக் கட்டிப்போடவில்லை
வானம் வின்மீண்களால் ஜொலிக்கிறது ஆனால் அவள் என்னுடன் இல்லை.

இதுவே முழுமை. தூரத்தில் யாரோ பாடுகிறார்கள் வெகு தூரத்தில்
என் ஆன்மாவில் திருப்தி இல்லை அவளை இழந்து 

என் விழிகள் தேடுகின்றன அவளை அருகில் அழைத்து வந்துவிடுவதுபோல்
என் இதயம் தேடுகிறது அவளை ஆனால் அவள் என்னுடன் இல்லை. 

அதே இரவு வெண்ணிறமாக்குகிறது அதே மரங்களை
நாங்கள், அன்றிருந்தது போல் இன்று இல்லை

இன்னும் நான் அவளை நேசிக்கவில்லை, இது உண்மை, ஆனால் நான் அவளை எவ்வளவு காதலித்தேன்
என் குரல் காற்றைப் பிடிக்க முயன்றது அவள் செவிகளைத் தொட 

வேறு ஒருவனுடையவள். அவள் வேறு ஒருவனுடைய்வளாவாள். என் முத்தங்களுக்கு முந்தியிருந்த அவள் 
அவள் குரல், அவளின் வெண் தேகம். அவளின் முடிவற்ற கண்கள்.

இன்னும் நான் அவளை நேசிக்கவில்லை, இது உண்மை, ஆனால் ஒருக்கால் நான் அவளைக் காதலிக்கலாம்
காதல் மிகச் சிறிது, மறப்பது மிகப் பெரிது

இதைப் போன்ற இரவு நேரத்தில் அவளை என் கைகளில் ஏந்தியிருந்ததால்
என் ஆன்மாவில் திருப்தி இல்லை அவளை இழந்து

இதுவே அவளால் துன்புற்று அனுபவிக்கும் இறுதி வலி
இவையே நான் அவளுக்கு எழுதும் இறுதி வரிகள்.








Monday, February 09, 2009

காலை முழுமையானது


புயல் சூழ்ந்த காலை வேளை
முதுவேனில் இதயத்தில். 

விடைபெறும் வெள்ளைக் கைக்குட்டையாய் மஞ்சுகள்
பயணிக்கும் காற்று தன் கை நீட்டி வழியனுப்பும்.

எண்ணிலடங்கா இதயம் தொட்ட காற்று
நம் காதலின் மவுனத்தின் மேல் துடிக்கும்.

ஒழுங்கும், புதினமும் கலந்து, மரங்களினூடே தெறிக்கும்,
போர்களும், பாடல்களும் நிறைந்த மொழி போல்.

வேகவீசி, உதிரும் இலைகளைக் கையிலேந்தும் காற்று
பாயும் அம்புகளான பறவைகளைச் சற்று திருப்பும்.

நாளம்இலா அலையாய் அவளைத் தள்ளாடி விழச் செய்த காற்று
சீரழித்தது பொருளற்ற சாரத்தையும், சாயும் தீக்கற்றையும்.

அவளின் மொத்த முத்தமும் தகர்ந்து, அமிழ்ந்து 
கோடைக் காற்றின் வாசலின் எதிரே நிற்கும்.


Tuesday, January 20, 2009

ஆ! எல்லையற்ற தேவதாரு

ஆ! எல்லையற்ற தேவதாரு, அலைகள் முணுமுணுத்துச் சிதறுகின்றன
ஒளிக் கீற்றுக்களின் மெல்விளையாட்டு, துறவியான மணிக் கூண்டு
மாலையில் மயக்கும் ஒளி உன் கண்ணில், பெண்மையே,
நிலவுலகின் முதல் யாழ், உன்னில் நிலவின் இன்னிசை!

உன்னில் பேராறுகள் இன்னிசைக்கும், அவற்றிலென் ஆன்மா பாயும்
உன் ஆசைப்படி, உன் விருப்பம் போலதை நீ செலுத்தலாம்.
என் பாதையை உன் நம்பிக்கை வில்லில் வை,
வெறியில் விடுவிப்பேன், என் அம்புகள் அனைத்தையும்.

சுற்றிலும் மூடுபனியான உன் இடையைக் காண்கிறேன்
உன் மவுனம் என் அல்லலுற்ற நேரத்தை வேட்டையாடும்
உன் படிகக் கால் போன்ற கைகளில், என் முத்தம்
நங்கூரம் இடும், ஈர வேட்கை கூடு கட்டும்.

ஹா! காதல் மணி அடிக்கும் உன் புதிர்க் குரல்
மறையும் மாலையில் எதிர் எதிரொலிக்கும்!
அர்த்தமுள்ள அந்நேரங்களில் பார்த்துள்ளேன், வயல்களின் மேல், .
கோதுமையின் காதுகள் காற்றின் வாயில் கண்டா மணியடிப்பதை!
-----
*தேவதாரு - pine

Friday, January 16, 2009

ஒளி உனைச் சூழ்கிறது

ஒளி உனைச் சூழ்கிறது, அதன் மானுடத் தீயில்.
அறிந்த, தெளிந்த துக்கவாசி, அவ்வழி நின்று
மறைத்தான் காலமெலாம் உனைச் சுற்றிய
மாலை நேரத்து மங்கல் ஒளியை.

பேச்சில்லை, என் நட்பே,
தனியநானேன், இறந்தவர் நடமாடும் நாழிகையில்
உள்ளம் முழுதும் வாழ்வின் கனலுடன்
அழிந்த நாளின் உண்மை வாரிசாய்!

சூரியனிலிருந்து ஓர் பழக் கீற்று
வீழ்கிறது உன் கருப்பு அங்கியில்
இரவின் நீண்ட, நெடிய வேர்கள்
உன் ஆன்மாவை உயிர்ப்பித்தன
உன்னில் ஒழிந்தவை வெளியேறின
வளம் பெறவே; உன்னில் உயிர்த்த,
நீல, சலனமற்ற மக்கள்

நீ! மகத்தான, உயிர்ப்பான, ஈர்க்கும் அடிமை
கருப்பு மற்றும் தங்கத்தை மாற்றிச் சுற்றும் வளையத்துக்கு:
எழு, வழிநடத்து, புதினத்தைப் பற்று, வாழ்வின் நிறையுடன்
உதிரட்டும் பூக்கள், சோகத்தின் முழு வடிவாய்.

---
மீண்டும் மன்னிப்பாராக!

Sunday, January 11, 2009

நெருடா


``நீங்கள் நெருடாவை மொழி பெயர்க்க வேண்டும்.'' இரு வருடங்களுக்கு முன் 
கவிதை சொன்னது இது. இப்பொழுதுதான் வாய்த்திருக்கிறது எனக்கு. அம் 
மாபெரும் கவிஞன் எழுதிய கவிதைத் தொகுப்பின் முதல் காதல் கவிதை இது. 

அவன் என்னை மன்னிப்பான் என்ற நம்பிக்கையுடன்.

****
பெண்ணின் உடல்  

பெண்ணின் உடல், வெள்ளை மலைகள், வெள்ளைத் தொடைகள்  
பூலோகத்தைப் போலிருக்கும் நீ, என்னில் சரண் அடைந்தாய். 
என் கடிய உழவனின் உடல் உன்னுள் ஆழப் பாய்ந்து  
பூமியின் அடியாழத்தில் உருவாக்கி எழச் செய்யும் மகனை.

நீண்ட கணவாய் போல் தனித்திருந்தேன். பறவைகள் பறந்தன 
நீள் இரவு எனைச் சூழ்ந்து பரவி ஆழ அழுத்தியது. 
எனைக் காக்க உனை நான் ஆயுதமாய் அணிந்தேன் 
என் வில்லின் அம்பு போல, கவட்டையின் கல் போல.
 
ஆனால் பழி வாங்கும் நாழிகை நெருங்கி விட்டது. ஆம், நான் உன்னில் காதலுற்றேன் 
உணர்கிறேன் உன் உடலின் சதையை, பாசியை , அதன் ஆர்வம் மற்றும் தடித்த பாலை.
ஆஹா, மதுக் கிண்ணம் போன்ற முலைகள்; ஹா, வெறுமையின் விழிகள்,
ஆஹா, பெண்மையின் இளஞ் செவ்விதழ்கள்; ஹா, உன் மெலிய, சோகக் குரல்.

இது என் பெண்ணின் உடல், நான் உன் நளினத்தில் வாழ்வேன் 
என் தாகம், என் அளவற்ற ஆசை, என் மாறும் பாதை! 
இருண்ட நதிக் கரையோரங்களில் தீராத் தாகம் பாயும், 
சோர்வு எனைத் தொடரும், டன் அளவில்லா வலி.



Sunday, August 26, 2007

poetry of the past

I must confess that I am amazed at the language skills of the young writers, mostly girls. Reading blogs of these girls, in their early twenties, has been a pleasurable passing time.

I was wondering what all things I wrote when I was in my early twenties. I know that I penned down two of my most memorable poems ever when I was 22. Titled `Framed Forever', on a lost sister and an untitled one about a young man watching his very own funeral. Both lost. I have been searching 'em for years. Yet to find them.

I stumbled upon two other pieces of paper. Here are they. The first one was written the night, I had a glimpse of two unknown women, in the same crowded market place, where we reside now. And the other, on an introspective birthday.

Little bit of editing has gone into it. Not all that bad, I think.


***

An ode to feminity

Walking along crowded market street
I saw the lady-little, yarned in yellow

Radiant was she, ransacking my heart
it was evident 'at she was collecting hearts

She had a poise to carrying objects
and lashes to filter animated subjects

Fortunate was I, for the twin stars
illuminated dark holes of this avatar

The creative colour had crossed me in a flash
consoling a humiliated heart heaped all in ash

A rare glimpse to cherish from a dark night
but 'at was not to be the end of that lone night

I saw a girl warped in white as
i climbed down from a complex story

Serene and simple her soul was
stranding me in a moment of victory

Creative was i before, complete i 'came
at that graceful glance of girlish purity.

Years of forlorn vanished, with 'at mind insane
planting in an untamed heart at once morality!

Away from realities of darkness and time
Light pure and new hath entered my mind

Hail the women of this world
the benign bonds of lasting love
and charming chains of continuity

Pray, my soul rests in 'at vast ocean
Of cosmic love. Called compassion.



***



Happy Birthday


On this day you 're born
Now seem to feel forlorn.

You wish you were not born
for the life has revealed thorns;
In the span of wishful years
that have gone concealing tears.

New rays alight the endless horizons
of earth where we all will be buried soon.
The cloudy mayhem of illness surround
the reality of existence present all around.

When there is an inner ever glowing flame
Why then seek wealth, power, place and fame?
When there is so much of light within the self
Why seek comfort in the murky, egotistic self?

Nature seems to be the only solace
relations deter the mind of its peace
Free you are to give everything in nature
attachments demand things giving pleasure

You never realise the truth within
and search for eternal liberty - wherein
you forget the beauty of being born
on a planet 'ch is being continually torn

You are the person, You are the planet.

When will humans understand this facet?
Even if you are a miniature cosmos by yourself,
Hope seems to be the only saviour of soverign selves.

Stories From The Soul Town

There lies a magical land. Surrounded by the green ghats to the west, gurgling great rivers on the east, the valley with the very blue sky. A temple town of the tamils. Sitting on the dancing rock on the highland overlooking the valley, the writer procreates the lives of the people of this lesser known south west. Full of strange yet simple souls.