புயல் சூழ்ந்த காலை வேளை
முதுவேனில் இதயத்தில்.
விடைபெறும் வெள்ளைக் கைக்குட்டையாய் மஞ்சுகள்
பயணிக்கும் காற்று தன் கை நீட்டி வழியனுப்பும்.
எண்ணிலடங்கா இதயம் தொட்ட காற்று
நம் காதலின் மவுனத்தின் மேல் துடிக்கும்.
ஒழுங்கும், புதினமும் கலந்து, மரங்களினூடே தெறிக்கும்,
போர்களும், பாடல்களும் நிறைந்த மொழி போல்.
வேகவீசி, உதிரும் இலைகளைக் கையிலேந்தும் காற்று
பாயும் அம்புகளான பறவைகளைச் சற்று திருப்பும்.
நாளம்இலா அலையாய் அவளைத் தள்ளாடி விழச் செய்த காற்று
சீரழித்தது பொருளற்ற சாரத்தையும், சாயும் தீக்கற்றையும்.
அவளின் மொத்த முத்தமும் தகர்ந்து, அமிழ்ந்து
கோடைக் காற்றின் வாசலின் எதிரே நிற்கும்.