ஆ! எல்லையற்ற தேவதாரு, அலைகள் முணுமுணுத்துச் சிதறுகின்றன
ஒளிக் கீற்றுக்களின் மெல்விளையாட்டு, துறவியான மணிக் கூண்டு
மாலையில் மயக்கும் ஒளி உன் கண்ணில், பெண்மையே,
நிலவுலகின் முதல் யாழ், உன்னில் நிலவின் இன்னிசை!
உன்னில் பேராறுகள் இன்னிசைக்கும், அவற்றிலென் ஆன்மா பாயும்
உன் ஆசைப்படி, உன் விருப்பம் போலதை நீ செலுத்தலாம்.
என் பாதையை உன் நம்பிக்கை வில்லில் வை,
வெறியில் விடுவிப்பேன், என் அம்புகள் அனைத்தையும்.
சுற்றிலும் மூடுபனியான உன் இடையைக் காண்கிறேன்
உன் மவுனம் என் அல்லலுற்ற நேரத்தை வேட்டையாடும்
உன் படிகக் கால் போன்ற கைகளில், என் முத்தம்
நங்கூரம் இடும், ஈர வேட்கை கூடு கட்டும்.
ஹா! காதல் மணி அடிக்கும் உன் புதிர்க் குரல்
மறையும் மாலையில் எதிர் எதிரொலிக்கும்!
அர்த்தமுள்ள அந்நேரங்களில் பார்த்துள்ளேன், வயல்களின் மேல், .
கோதுமையின் காதுகள் காற்றின் வாயில் கண்டா மணியடிப்பதை!
-----
*தேவதாரு - pine
No comments:
Post a Comment