ஒளி உனைச் சூழ்கிறது, அதன் மானுடத் தீயில்.
அறிந்த, தெளிந்த துக்கவாசி, அவ்வழி நின்று
மறைத்தான் காலமெலாம் உனைச் சுற்றிய
மாலை நேரத்து மங்கல் ஒளியை.
பேச்சில்லை, என் நட்பே,
தனியநானேன், இறந்தவர் நடமாடும் நாழிகையில்
உள்ளம் முழுதும் வாழ்வின் கனலுடன்
அழிந்த நாளின் உண்மை வாரிசாய்!
சூரியனிலிருந்து ஓர் பழக் கீற்று
வீழ்கிறது உன் கருப்பு அங்கியில்
இரவின் நீண்ட, நெடிய வேர்கள்
உன் ஆன்மாவை உயிர்ப்பித்தன
உன்னில் ஒழிந்தவை வெளியேறின
வளம் பெறவே; உன்னில் உயிர்த்த,
நீல, சலனமற்ற மக்கள்
நீ! மகத்தான, உயிர்ப்பான, ஈர்க்கும் அடிமை
கருப்பு மற்றும் தங்கத்தை மாற்றிச் சுற்றும் வளையத்துக்கு:
எழு, வழிநடத்து, புதினத்தைப் பற்று, வாழ்வின் நிறையுடன்
உதிரட்டும் பூக்கள், சோகத்தின் முழு வடிவாய்.
---
மீண்டும் மன்னிப்பாராக!
1 comment:
possible to post the originals? bit tired to look around for them :) The translations by themselves are very good.
Post a Comment